எச்.பி. நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நீக்கம்

எச்.பி. நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நீக்கம்

உலகில் முன்னணி கம்யூட்டர் நிறுவனமாக எச்.பி. என்று அழைக்கப்படும் ஹேவ்லெட் பேக்கார்டு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர்கள் உற்பத்தி செய்வதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது.

சீனாவின் லெனோவா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தற்போது எச்.பி. நிறுவனத்திற்கு கடும் போட்டியாக உள்ளன. இதனால் 2012–ம் ஆண்டில் இருந்து எச்.பி. நிறுவனம் சரிவுகளை சந்தித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க 30 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக எச்.பி. நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தில் 3 லட்சம் பேர் தற்போது பணியாற்றி வருகிறார்கள். 30 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அந்த நிறுவனத்திற்கு மிச்சமாகும். இதன் மூலம் தொடர்ந்து லாபத்தில் இயங்கலாம் என அந்த நிறுவனம் கருதுகிறது.

(riz)