கொரோனா நோயாளிகள் 05 பேர் குணம்

கொரோனா நோயாளிகள் 05 பேர் குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 05 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2687 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது