இன்று நாடாளுமன்றில் பிரதமரினால் விஷேட உரை

இன்று நாடாளுமன்றில் பிரதமரினால் விஷேட உரை

நாடாளுமன்றமானது இன்று மீண்டும் கூடவுள்ளது.  நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பத்திலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாயகத்த மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி வழங்கிய பின்னர் முதன்முறையாக இன்றைய தினமே நாடாளுமன்றம் கூடவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 48 உறுப்பினர்கள் இன்றைய தினம் எதிர்கட்சியில் உறுப்பினர்களாக ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர்.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு ஆசனம் ஒதுக்கும் நடவடிக்கைகளும் இதுவரையில் நிறைவடைந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பத்திலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றத்தை விழிப்புணர்வூட்டவுள்ளார் என தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகின்றது.

(riz)