CSK அணியின் தலைமை யாருக்கு

CSK அணியின் தலைமை யாருக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைவர் யார் என்பதை குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைவரை டோனி ஏற்கனவே தீர்மானித்துள்ளதை அந்தணியின் வீரரான பிராவோ கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பித்த நாள் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக டோனி நீடித்து வருகிறார்.

டோனி தலைமையிலான சென்னை அணி மூன்று கிண்ணங்களை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டோனிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யார் தலைமை பொறுப்பை ஏற்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக அந்தணியின் வீரரான பிராவோ அளித்த பேட்டி ஒன்றில், அனைவரும் ஒரு கட்டத்தில் ஒதுங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த யோசனை டோனியின் மனதில் உள்ளது. அது ரெய்னா அல்லது ஒரு இளம் வீரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாகவே உள்ளது என பிராவோ கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகிறது.

இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியில் மோதவுள்ளன,