பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. போட்டி தொடங்குவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டது. அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்று சிறப்பான வகையில் தொடரை முடித்தது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை நியூசிலாந்து அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்று போட்டியில் கலந்து கொள்வார்கள்.

பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தேசிய அணி விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. முன்னணி வீரர்கள் சென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படும் என்ற விமர்சனமும் எழும்பியுள்ளது.