ஏற்றுமதியை பலப்படுத்துவதற்காக தமது இணையத்தளத்தை மறு வடிவமைக்கும் கிரிஸ்புரோ

ஏற்றுமதியை பலப்படுத்துவதற்காக தமது இணையத்தளத்தை மறு வடிவமைக்கும் கிரிஸ்புரோ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் தமது இணையத்தளத்தை மறு வடிவமைப்பு செய்து டிஜிட்டல் தொழில்நுட்ப திறனூடாக தமது ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மறு வடிவமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்ட புதிய கிரிஸ்புரோ இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப திறன்களுக்காகவும் பாவனையாளர்களின் வசதிகளுக்காகவும் பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமது புதிய இணையத்தளத்தில் கிரிஸ்புரோவுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் அனைத்து பிரிவினரதும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதி துறையில் அதிகமாக ஈடுபட்டுள்ள கிரிஸ்புரோ நிறுவனம் இந்த இணையத்தளத்தில் அதற்கான வசதிகளை வழங்கியுள்ளது. கிரிஸ்புரோவின் இலச்சினை வாழ்வாதாரமாக மாறியுள்ள இலங்கை கோழிப்பண்ணை தொழிலை சீராக நடத்திச் செல்வதற்கான தேவை மற்றும் ஏற்றுமதி சந்தையில் பிரவேசமும் இந்த மறு வடிவமைப்பு செய்யப்பட்ட புதிய இணையத்தளத்தின் மூலம் தெளிவாக தெரிகின்றது.

‘கிரிஸ்புரோ தயாரிப்பின் விசேடத்தன்மை மற்றும் நிறுவனத்தின் நிலையான வர்த்தக முறைமைகள் குறித்து தெளிவான புரிந்துணர்வு எமது வாடிக்கையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் ஏனைய பிரிவினருக்கும் இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் இந்த புதிய இணையத்தளத்தில் கிரிஸ்புரோ பயணத்தின் ஒரு திரும்புமுனையாக அமையும் என்பதே எனது கருத்தாகும். மறு வடிவமைக்கப்பட்ட இணையத்தளமானது கிரிஸ்புரோ இலச்சினையின் உட்பார்வை மற்றும் அதன் நடவடிக்கைகளை சரியாக பிரதிபலித்துக் காட்டக்கூடிய தொடர்பாடல் செயல்பாட்டு முறையாக இருப்பதுடன் ஏற்றுமதி சந்தர்ப்பத்தை பலப்படுத்தி தேசிய வருமானம் நாட்டிற்குள் பெருக்கெடுத்து வருவதை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது எமது நீண்டகால நோக்கமாக உள்ளது.’ என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ் செலர் தெரிவித்துள்ளார்.

கிரிஸ்புரோ நிறுவனம் மத்திய கிழக்கு வலைகுடா பிராந்தியத்தில் தமது 30 தொன் உற்பத்திப் பொருட்களை முதலாவதாக ஏற்றுமதி செய்த இலங்கையின் முதலாவது நிறுவனமாகவும் கிரிஸ்புரோ திகழ்கின்றது. அத்துடன் மேலும் கோழி இறைச்சிகளை தொடர்ந்து மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இலங்கையில் கோழிப் பண்ணை தொழில் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்குவதுடன் கால்நடை வளத் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6மூ ஆகும். அண்மையில் கோழிப் பண்ணை தொழில் விவசாய துறைக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கையில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு கோழி வளர்ப்பு தொழில் தற்போது உகந்த ஒத்துழைப்பை வழங்குகின்றது. முட்டை மற்றும் கோழி இறைச்சி தற்போது மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் இலங்கை நாட்டின் கோழி வளர்ப்பு தயாரிப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு எமது நாட்டிலுள்ள கோழிப் பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளன. மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் செயற்படும் இந்த நாட்டிலுள்ள கோழிப் பண்ணை வர்த்தகம் நவீன தொழில்நுட்பத்தால் பலமடைந்துள்ளதுடன் அரசின் வரி வருமானத்திற்கு உகந்த ஒத்துழைப்புக்களையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் பிரதான காரணமாக அமைகின்றனர்.

கிரிஸ்புரோ மறு வடிவமைக்கப்பட்ட இணையத்தளம்

No description available.