ஜப்பானின் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு

ஜப்பானின் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) – ஜப்பானில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியில் இன்று(14) நடந்த வாக்கெடுப்பில் யோஷிஹைட் சுகா வெற்றி பெற்றார்.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். அந்த வகையில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், யோஷிஹைட் சுகா 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், இன்று தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகா ஓர் ஆண்டுக்கு கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவார்.

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்சோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியில் இருந்து புதிய பிரதமரை பாராளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார்.