2024 வரை போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது

2024 வரை போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – உலகில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை செல்லலாம் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைவருக்கும் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India) தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும்

35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இது உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவித்துள்ளார்.