ஸ்ரீசாந்த் இனது தடைக்காலம் முடிவுக்கு

ஸ்ரீசாந்த் இனது தடைக்காலம் முடிவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்ச நீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதன்படி 2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரை கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக கேரள அணியின் பயிற்சியாளர் டினு யோஹணன் தெரிவித்துள்ளார்.