உத்தமன் என்று எவனுமில்லை அரசியல் என்னும் சதுரங்கப் பலகையில்

உத்தமன் என்று எவனுமில்லை அரசியல் என்னும் சதுரங்கப் பலகையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘புத்த சாசனத்தினை பாதுகாக்கவே தான் வந்துள்ளேன்’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் தெரிவித்திருந்ததாக சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

துட்டகைமுனு அரசின் பின்னர் அவ்வாறு கருத்துத் தெரிவித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமே என அமைச்சர் மாவனல்லை, தெவனகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

தெவனகல புனிதப் பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய அவர் களவிஜயம் மேற்கொண்டமையானது தெவனகல பகுதியில் தற்போது இடம்பெற்றுள்ள அழிவினை உலகிற்கு வெளிச்சம் காட்டிய பின்னர் அங்கு வருகை தரும் முதல் அமைச்சரவை அமைச்சராக தான் இதனை உரிய விதத்தில் சட்டத்தின் அடிப்படையில் கையாளுவேன் என அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.

எனினும், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2ம் துட்டகைமுனு அரசர் என அரசியல்வாதிகள் சிலர் புகழாரம் பாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எது எப்போது வேணும்னாலும் நடக்கலாம் அது தான் யதார்த்தம்