முட்டையின் விலையில் வீழ்ச்சி

முட்டையின் விலையில் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் முட்டையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய தற்பொழுது 16 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கடந்த தினங்களில் 20 – 25 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை வழமைக்கு திரும்பியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.