உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

ஆண்டுதோறும் சர்வதேஷ ரீதியாக அக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினமாக கொண்டாடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே.

இலங்கை மக்கள் என்ற வகையில் நாமும் அதில் கைகோர்ப்போம். பிள்ளைச்செல்வங்களுக்கு உயிரிலும் மேலாக அன்பைப்பொழியும் நாம் அவர்களின் பாதுகாப்பு குறித்து சமூகத்திற்க்கு விரல் நீட்டாது நமது செல்வங்கள் குறித்து நாமே நம்மிடம் கேள்வி கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

சிரிய அகதி அய்லன் குர்தி தொடக்கம் அண்மையில் கொடூரமாய் பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்ட சேயா சவ்மினி, மிலேச்சத்தனமாய் கொலை செய்யப்பட்ட ஆதித்ய இவர்கள் மூவரினதும் மரணப் பதிவுகளைத் தாங்கி இம்முறை சிறுவர் தினத்தினை கொண்டாடுவது உண்மைலேயே சொல்லணாத் துயரமே.

எது எவ்வாறு இருப்பினும் கால்பதித்துள்ள நமது செல்வங்களின் பாதுகாப்பு குறித்து கண்மூடித்தனமாய் செயற்படாது விழிப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும். இதன் பொருட்டே இம்முறை “குழந்தைகளுக்கான நட்புச் சூழலும், பிரகாசமான உலகமும்” என்ற தொனியில் கொண்டாட உள்ளோம்.

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து சட்டமானது இன்னும் கடுமையாக்கப்பட வேண்டிய தேவை உள்ளதென்பதனை நாம் இக்கால கட்டத்தில் நன்கு அறிந்துள்ளோம். இளசுகளின் வாழ்க்கையில் விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்து சட்டமானது முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது.

மேலும், இம்முறை கொண்டாடப்படும் சிறுவர் தினத்தில் நமது செல்வங்கள் குறித்து கூடிய பங்களிப்பிற்கு ஒவ்வொரு தாயும்,சகோதரியும்,சகோதரரும் இலங்கை வாழ் அனைத்து மக்களும் கைகோர்த்து பங்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். என மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிற்கு பொறுப்பான சந்திராணி பண்டார  மேலும் தெரிவித்துள்ளார்