பிரான்ஸில் மீண்டும் முடக்கம்

பிரான்ஸில் மீண்டும் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் இரண்டாம் கட்ட முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற சேவைகளான உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில், அத்தியாவசிய தொழில்கள் மற்றும் மருத்துவ காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாத்திரமே தமது வீடுகளை விட்டு வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸில் நேற்று மாத்திரம் 33 ஆயிரம் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.