சேயா கொலை – இருவர் குறித்தும் இடைக்கால அறிக்கை

சேயா கொலை – இருவர் குறித்தும் இடைக்கால அறிக்கை

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலை தொடர்பிலான விசாரணைகளில், கொட்டதெனிய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 7ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட 17 வயதான மாணவன் மற்றும் 33 வயதான நபர் ஆகிய இருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த சிறுமி கொலை வழக்கில், 17 வயதான மாணவனை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமளவுக்கு போதுமான சாட்சியங்கள் கொட்டதெனிய பொலிஸாருக்கு இருந்ததா என்பது குறித்தே இந்த விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைதான பின்னர் சிறுவன் உள்ளிட்ட இருவரும் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது

(riz)