இன்னாள் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் கூறி கைதான சம்பத் பிணையில் விடுவிப்பு

இன்னாள் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் கூறி கைதான சம்பத் பிணையில் விடுவிப்பு

முகநூலில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் தகவல் வெளியிட்டதாக தென் மாகாணசபை உறுப்பினர் சம்பத் அதுகோரல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்று கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

10,000 ரூபா ரொக்கப் பிணையிலும்  தலா 500, 000 ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவதூறு ஏற்படும் வகையில் முகநூலில் தகவல்களை பிரசுரிக்க உதவி செய்த இருவர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் புலானய்வுப்  பிரிவினர் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை மைத்திரிபால சிறிசேனவையும் பெண் ஒருவரையும் தொடர்புபடுத்தியே குறித்த முகநூல் பதிவு பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(riz)