நாலக்க எதிாிசிங்க CID இல் ஆஜர்

நாலக்க எதிாிசிங்க CID இல் ஆஜர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்வர்ணமஹால் நகையகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாலக்க எதிாிசிங்க குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

13.7 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமான வைப்பாக தம் வசம் வைத்திருந்தமை மற்றும் பணச் சலவை போன்ற குற்றச்சாட்டுக்களின் போில் சட்ட மா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு ஸ்வர்ணமஹால் நகையகத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக்க எதிாிசிங்க, தீபா எதிாிசிங்க மற்றும் அசங்க எதிாிசிங்க ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.