சீனா மீளவும் முடங்கியது

சீனா மீளவும் முடங்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில் ஹுபே மாகாணத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் ஹுபே மாகாணத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களாக அங்கு கொரோனா இருமடங்காகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுபே மட்டுமல்லாமல் சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.