அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் ICC இனது நிலை

அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் ICC இனது நிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணி ஐ.சி.சி.யின் சட்டவிதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அகில தனஞ்சய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டு பந்துவீச முடியுமென சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சந்தேகம் எழுந்தது. பின்னர் முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)