இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் மஜினே நகரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 7 பேர் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் 637 பேர் காயமடைந்துள்ளதுடன், 60 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று அதிகாலை காலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாக மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.