இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2 – 0 என்ற அடிப்படையில் இழந்துள்ள நிலையில், தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும், தற்காலிகமாக குறித்த பதவியை தான் பெற்றுக்கொண்டுள்ளாதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.