இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்

இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளின் ஊடாக இந்த வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜ தந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமெரிக்காவின் 46வது புதிய ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.