
பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தன் மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் மகத். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் திகதி மகத் சென்னையில் வைத்து பிராச்சியை திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.