சுகாதார அமைச்சர் தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

சுகாதார அமைச்சர் தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான தகவல்களை சுகாதார அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், வைத்தியசாலையில் குறைபாடுகள் காணப்படுவதாக முறைப்பாடுகளை முன்வைத்து, அவர் வீடு திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொடர்ந்தும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையிலே சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.