ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவினை மீளாய்வு செய்யுமாறு ரஞ்சன் மனுத்தாக்கல்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மீளாய்வு செய்யுமாறு கோரியே அவர் உயர் நீதிமன்றில் தனது வழக்கறிஞர் மூலமாக அவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.