தடைகளை தாண்டி பொத்துவில் – பொலிகண்டி பேரணி ஆரம்பம்

தடைகளை தாண்டி பொத்துவில் – பொலிகண்டி பேரணி ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திட்டமிட்டபடி, இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது.

பொத்துவில் தொடக்கம் இடையிடையே அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் தடைகள் இருந்தன. அத்தனை தடைகளைத் தாண்டி இப்பேரணி நடைபெற்று வருகிறது.

பொத்துவில் தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசத்தில் கன மழை பெய்தபொழுதிலும் அனைவரும் நனைந்த வண்ணம் பேரணியில் பங்கேற்றனர்.

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.சிறிநேசன், சி.லோகேஸ்வரன், சிவில் தலைவர்கள் மற்றும் சமயத் தவைர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

COMMENTS

Wordpress (0)