தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கை

தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டால் தனியார் பேரூந்துகள் அரசுடமையாக்கப்படும்
தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கை

பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டால் தனியார் பேரூந்துகள் அரசுடமையாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எச்சரித்துள்ளார்.

ஹபரன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அநீதியான முறையில் கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பேரூந்து சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று பரவுகைக்கு மத்தியில் அரசாங்கம் தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை நிவாரணங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களினால் தடுத்து நிறுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தால், வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத தனியார் பேரூந்துகளை தற்காலிக குத்தகை அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை கையகப்படுத்தி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)