ரவி, அலோசியஸ் : எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

ரவி, அலோசியஸ் : எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்ப்பச்சுல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(05) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையில் செல்ல இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)