தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4.56 சதவீதம் குறைவடைந்துள்ளது.

தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1790.33 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

இதற்கமைய இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 106,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 97,450 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)