தொற்று நோய்தடுப்பு பிரிவுடன் கலந்துரையாடலுக்கு தயார் : GMOA

தொற்று நோய்தடுப்பு பிரிவுடன் கலந்துரையாடலுக்கு தயார் : GMOA

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுபரவல் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ள, சுகாதார அமைச்சின் தொற்று நோய்தடுப்பு பிரிவினருடனான கலந்துரையாடலுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அழைப்பு விடுத்துள்ளது.

இதனூடாக நாட்டில் கொரோனா தொற்று பரவலின் தற்போதைய நிலையினை கண்டறிய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு அபாயகரமான நிலைக்கு இட்டுச்செல்லப்படுவதை தவிர்த்து செயற்படுவதற்கு இந்த கலந்துரையாடல் பயனுள்ளதாக அமையும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

COMMENTS

Wordpress (0)