சித்தி 2 தொடரில் இருந்து ராதிகா விலகல்

சித்தி 2 தொடரில் இருந்து ராதிகா விலகல்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – 800 பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் முரளிதரனுக்கும் ஆதரவாக பேசியவர்களில் நடிகை ராதிகாவும் ஒருவர். அவர் சன் தொலைக்காட்சிக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பயிற்சியாளராக முரளிதரன் நீடித்து வருகிறார். அவரை அந்த பணியில் இருந்து நீக்க சொல்லி போராடுவார்களா என்பது போல பேசியிருந்தார்.

இது சன் தொலைக்காட்சி நிறுவனத்து அதிருப்தியை ஏற்படுத்த ராதிகா தயாரித்து நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 தொலைக்காட்சி தொடரை முடித்துக் கொள்ளுமாறும் சொல்லியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை ராதிகா மறுத்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் அவரை தவிர மற்றக் கலைஞர்கள் எல்லாம் பங்கேற்க தொடர் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)