நான் பெளத்தனாக இருந்து கொண்டு வெட்கமடைகிறேன் – ஹேஷா [VIDEO]

நான் பெளத்தனாக இருந்து கொண்டு வெட்கமடைகிறேன் – ஹேஷா [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முதல் கொரோனாவின் போது, இலங்கை கொவிட் 19 பட்டியலில் 122வது இடத்தினை தக்க வைத்துக் கொண்டது, இப்போது முன்னேறி 90வது இடத்தில் உள்ளோம். அவ்வாறே மரண வீதமும் அன்று 0.2% இருந்தது, இன்று 0.52% ஆக உயர்ந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு இங்கே இல்லை. நேற்றைய தினம் தடுப்பூசியினை பெற பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிசையாக சென்றிருந்தனர். அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசியினை பெற்றுள்ளதாகவே புலப்படுகின்றது.

நான் பெளத்தனாக இருந்து கொண்டு வெட்கமடைகிறேன்.
“நான் கொரோனாவுக்கு பயமில்லை, தனக்கு தடுப்பூசி தேவையில்லை” என தெரிவித்த ரதன தேரர் காலையிலேயே தடுப்பூசிக்காக சென்றிருந்தார்.

பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும். ரதன தேரர் போன்றோர் ஏன் அரசியலுக்கு வந்தார் என சிந்தியுங்கள்.

இந்தியாவிடமிருந்து எமக்கு நன்கொடையாக பெறப்பட்ட தடுப்பூசிகளை அரசியல் வட்டாரத்தில் உள்ளோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது உண்மையில் வருந்தத்தக்கது.

-பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே