‘டெடி’ OTT தளத்தில்

‘டெடி’ OTT தளத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார்.

இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது.

இந்நிலையில், டெடி படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 19ம் திகதி இப்படம் நேரடியாக ஓடிடி (OTT) தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் டெடி படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)