சுகாதார வழிமுறைகளை மீறி, இதுவரையில் 3,180 பேர் கைது

சுகாதார வழிமுறைகளை மீறி, இதுவரையில் 3,180 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று(19) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 3,180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட் வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த இன்றைய தினமும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை தொடரும் என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

COMMENTS

Wordpress (0)