வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வெலிகட சிறைச்சாலையை ஹொரண பகுதிக்கு இடமாற்ற தீர்மானித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்திருந்தார்.

பூஸ்ஸ சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இவ்வாறு இடமாற்றப்படும் சிறைச்சாலை அதி பாதுகாப்பு சிறைச்சாலையாக பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.