பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்ட மாணவரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவன் தாக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.