டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 3 இந்திய வீரர்கள்

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 3 இந்திய வீரர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரிவரிசை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அஹமபாத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் 7 விக்கட்களை வீழ்த்தியிருந்த நிலையில் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திலுள்ள நெயில் வொக்னரை விட இரண்டு புள்ளிகள் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்ட இந்திய அணி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் ரோஹித் சர்மா உள்ளிட்ட மூன்று இந்திய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.