உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி விரைவில் அதிகரிக்கப்படும்

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி விரைவில் அதிகரிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதன் ஊடாகவே உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக விலையை பெற்றுகொடுக்கமுடியும் என அங்கஜன் இராமநாதன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலிடம் விவசாயிகள் சார்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணம் விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

உருளைக்கிழங்கிற்கான வரியினை ஒரிரு வாரங்களுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து வரி அதிகரிப்பு சம்மந்தமாக விதை உருளைக்கிழங்கு பயிரினை விதைப்பதற்கு முன்னரே நடவடிக்கை எடுப்பதன் மூலம் பல விவசாயிகளை உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதாக அமையும் என விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

அதற்கும் உரிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் தற்போது உழுந்து இறக்குமதி தடை செய்து இருப்பதனால் உள்நாட்டு விவசாயிகள் உழுந்தை பயிரிட்டு நல்ல இலாபத்தை பெறமுடியும் என‌வும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் உழுந்து இறக்குமதி தடை நீடிக்கும் எனவும் விவசாயிகள் எந்த பயமும் அற்ற நிலையில் உழுந்தினை பயிரிடலாம் எனவும் விவசாயிகளுக்கு தெரிவித்தார்.