முஸ்லிம்களது உடல்களை அடக்க தனித்தீவு

முஸ்லிம்களது உடல்களை அடக்க தனித்தீவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவு செய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டி அறிக்கையை இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடவும் சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களில் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தேசிய அழுத்தங்கள் காரணமாக தற்போது உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் நல்லடக்கம் செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பொது இடங்களில் அல்லது பொது மயானங்களில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியுமா என்பது குறித்து கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(ஆர்.யசி)