கொரோனா மரணம் : அடக்க தனித்தீவு அறிவிப்பு

கொரோனா மரணம் : அடக்க தனித்தீவு அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்ற இடமாக இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இன்று(02) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவு செய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.