தங்கத்தின் விலையில் திடீர் சரிவு

தங்கத்தின் விலையில் திடீர் சரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக, தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

இந்நிலையில், இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.76 சரிந்து ரூ.4,266க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசு குறைந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.