இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு – உயிர்வாழும் குழந்தை

இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு – உயிர்வாழும் குழந்தை

மும்பை அருகே சோலாப்பூரில் நான்கு மாத பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு ஏற்பட்டது.

எனினும் அதில் உயிர் பிழைத்த அந்த குழந்தை தற்போது மும்பை நகர மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தை சாதாரமான வாழ்க்கை வாழ இன்னும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என்று அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

அந்த குழந்தைக்கு இடது கரோனரி இதய நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் உடலுக்கு ஒக்சிஜன் விநியோகத்தை நிறுத்தி மாரடைப்பை ஏற்படுவதுடன், இதயத்திற்கு சிறிதளவு இரத்த ஓட்டம் மட்டுமே செல்வதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 20க்கும் மேற்பட்ட தடவைகள் அந்தக் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது தாயார் பிரீத்தி தெரிவித்தார்.

மேலும் குழந்தையின் எடை வெகுவாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.