புளோரிடாவை தாக்கிய இர்மா புயல் சுமார் 6 மில்லியன் மக்கள் பாதிப்பு..

புளோரிடாவை தாக்கிய இர்மா புயல் சுமார் 6 மில்லியன் மக்கள் பாதிப்பு..

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய ‘இர்மா’ புயல் பலத்த சேதங்களை உண்டாக்கியதால், லட்சக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புயலின் தாக்கத்தினால் கரீபியன் தீவுகள் இன்னும் மீளாத நிலையில் நேற்று(11) வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்துள்ளதுடன் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

புளோரிடா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சுமார் 6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புளோரிடாவில் மட்டும் புயலினால் இதுவரை 4 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.