சாவித்ரியாக மாறும் கீர்த்தி சுரேஷ்..

சாவித்ரியாக மாறும் கீர்த்தி சுரேஷ்..

ஹீரோவை காதலிக்க வேண்டும், டூயட் ஆட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் தனது பாணியில் செய்துவிட்டு சென்றுகொண்டிருந்த கீர்த்தி சுரேஷுக்கு புதிய சவால் வந்திருக்கிறது.

பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை படத்தில் சாவித்ரி பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்காக சாவித்ரி நடித்த பழைய படங்களை திரும்ப திரும்ப பார்த்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரது நடை உடை பாவனை எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். என்னதான் பயிற்சி எடுத்தாலும் அசல் சாவித்ரியாக இவர் மாற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

பாதி கிணறு தாண்டியதுபோல், சாவித்ரி கெட்டப் அணிந்து பாதி படம் நடித்து முடித்திருக்கிறார் கீர்த்தி. இதுவரை பட தரப்பிலிருந்து சாவித்ரி தோற்றத்தில் கீர்த்தி எப்படி இருப்பார் என்ற புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
பட்டுப்புடவையில், காண்டை அணிந்து சாவித்ரிபோல் இலேசான புன்னகை தவழும் காட்சியில் கீர்த்தி நடித்த ஸ்டில் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா. பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.