டூத் பேஸ்டை வைத்து வீட்டை எப்படி சுத்தம் செய்யலாம்?

டூத் பேஸ்டை வைத்து வீட்டை எப்படி சுத்தம் செய்யலாம்?

காலையில் எழுந்ததும் பற்களை துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நிறத்தை தருவதோடு, வீட்டில் இருக்கும் சில பொருட்களையும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. அது என்னென்ன பொருட்கள் மற்றும் எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள்…

# வெள்ளி மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்கள் அல்லது பாத்திரங்களில் ஏதேனும் சற்று நிறம் மங்கியிருப்பது போன்று தெரிந்தால், அப்போது கொஞ்சம் டூத் பேஸ்டை, அதில் தடவி தேய்த்தால், வெள்ளி மற்றும் தங்கம் பளிச்சென்று ஆகும்.

# லெதர் ஷூக்களில் ஏதேனும் கரை பட்டிருந்தால், அப்போது டூத் பேஸ்டை அதில் தடவி ஈரமான துணிகளை வைத்து துடைத்தால், கரைகள் போய்விடும்.

# பாத்திரங்களில் துருக்கள் பிடித்திருந்தால், அந்நேரத்தில் டூத் பேஸ்ட் வைத்து தேய்த்து சுத்தம் செய்தால், துருக்கள் விரைவில் நீங்கிவிடும்.

# வைர மோதிரத்தில் அழுக்குகள் புகுந்து, அதன் அழகான வெள்ளை நிறத்தை பாதித்தால், அப்போது ஒரு மென்மையான பிரஸ்-ஐ எடுத்துக் கொண்டு, அதில் பேஸ்டை தடவி, சுத்தம் செய்தால், அழுக்குகள் விரைவில் வெளியேறிவிடும்.

# குழந்தைகளுக்கு பால் பாட்டில்களில் பால் நாற்றம் இருக்கும், அப்போது புதிதாக பாட்டிலை வாங்காமல், அதில் வரும் நாற்றத்தை முற்றிலும் போக்க, டூத் பேஸ்டை, பிரஸில் தடவி தேய்த்து கழுவினால், அதில் வரும் நாற்றம் போய்விடும்.

# வீட்டுச்சுவர்களில் கீறல்கள் இருந்தால். அத்தகைய கரையை போக்க டூத் பேஸ்ட் வைத்து துடைத்தால், அந்த கரைகள் போய்விடும்.