சுருக்கமான சருமத்தை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க…

சுருக்கமான சருமத்தை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க…

கை மற்றும் கால்களில் சில நேரங்களில் தோல் உரிவதை நாம் பார்த்திருக்கிறோம்.இது ஏன் என்றால் சருமம் அதன் மேல் படிவத்தில் படர்ந்துள்ள இறந்த செல்களை அழித்து கொள்வதாகும்.

பொதுவாக சிறு வயதில், பழைய தோல் உரிந்து புது தோல் வர 4 வாரங்கள் ஆகும். ஆனால் வயது முதிர்ச்சியில் புதிய தோல் வர 2.5 மாதங்களை வரை ஆகும். இந்த தோல் உரிதல் மற்றும் புதுப்பித்து கொள்ளுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு விட்டமின் குறைபாடுகள், சூரிய வெளிச்ச குறைபாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.

இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை களைந்து புது பொலிவை பெற சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

ஸ்க்ரப்:
இது சருமத்தில் இருந்து புதிய தோல் வெளியாவதை தீவிரப்படுத்துகிறது. சர்க்கரை, ஓட்ஸ், உப்பு, காபீ கொட்டை , பாதாம் போன்றவை சிறந்த ஸ்க்ரப்களாகும். தேன், தயிர், பால் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றோடு இந்த ஸ்கரப்பை சேர்க்கலாம். ஈரப்பதம், புத்துணர்ச்சி , மற்றும் நீர்ச்சத்து தேவைக்காக பைனாப்பிள் , பப்பாளி , பூசணிக்காய் போன்றவற்றை சேர்க்கலாம்.

தேன்:
சரும பாதுகாப்பிற்கு ஒரு இயற்கையான மூலப்பொருள் தேன்.
சருமத்தை இளமையாக தொடர சேர்கிறது. சுருக்கங்கள் தோன்றுவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதனை வேறு சில பொருட்களோடு இணைத்து பயன்படுத்தும்போது நல்ல பலனை பெறலாம்.

தயிர்:
தயிரில் ஸ்க்ரப்போடு இணையும் போது நல்ல பலனை கொடுக்கிறது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. சரும துளைகளில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குகிறது. சருமத்தில் தோன்றும் புள்ளிகளை அழிக்கிறது.

சர்க்கரை:
பழுப்பு சர்க்கரையில் க்ளைகோலிக் அமிலம் உள்ளது. இது இயற்கையான தோல் உரிவதற்கான பலனை கொடுக்கிறது. குறிப்பாக பருக்கள் மற்றும் இதர சரும தொந்தரவுகளுக்கு தீர்வாக இருக்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராடி, சருமத்தை தூய்மையாக வைக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாரும் இயற்கையான முறையில் தோல் உரிதலுக்கு பயன்படுகிறது. இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது.

பப்பாளி:
விட்டமின் ஏ , விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ அதிகமாக உள்ளதால், நுண் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் பப்பைன் என்னும் என்சைம் தோல் உரிதலுக்கான செயல்பாட்டில் அதிகம் உதவும். சோர்ந்த மற்றும் எண்ணெய் பசையுடைய சருமத்திற்கு ஏற்றது. வயது முதிர்வின் காரணமாக தோன்றும் கோடுகள், சுருக்கங்கள் , போன்றவை பப்பாளியால் குறைக்கப்படுகின்றன.