பாகுபலி அரண்மனை வடிவில் தயாராகும் சமந்தா திருமண ஆடை…

பாகுபலி அரண்மனை வடிவில் தயாராகும் சமந்தா திருமண ஆடை…

சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் ஒக்டோபர் மாதம் நடக்கவுள்ள நிலையில் திருமண ஆடையை  பிரத்யேகமாக வடிவமைக்க சமந்தா முடிவு செய்துள்ளார். தனது தோழியும் ஆடை வடிவமைப்பாளரான ரேஷா பஜாஜ்ஜிடம் உடை தைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

மணப்பெண்களிடம் லெஹென்கா [lehenga] ஸ்டைல் உடைதான் தற்போது பிரபலமாக இருக்கின்ற நிலையில்  அதே உடையைத்தான் சமந்தாவும் தேர்வு செய்திருக்கிறார். ஆடை வடிவமைப்பில் ஒரு காதல் கதை இருக்க வேண்டும் என்று தோழிக்கு அன்பு கட்டளையிட்டார். அதைக்கேட்டு ஒரு நிமிடம் அசந்துபோன ரேஷா பிறகு சம்மதம் சொன்னார்.

முதலில் டிசைன்களை ஓவியமாக வரைந்தார் ரேஷா. அரண்மனை, குதிரை அணிவகுப்பு என பாகுபலி அரண்மனை செட் கணக்கில் டிசைன் தயாரித்தார்.

அது பிடித்துப்போகவே உடனே சரி சொன்ன சமந்தா, டிசைனை ஓவியமாக வரைவது முதல் லெஹென்கா உடை ஜரிகை வேலைப்பாடுகளுடன் முற்றிலுமாக தயாராகும்வரை எல்லாவற்றையும் வீடியோ படமெடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

லெஹென்காவும், வீடியோவும் சமீபத்தில் சமந்தா கையில் கிடைத்ததும் வீடியோவை நெட்டில் வெளியிட்டவர், லெஹென்காவை ஆசை தீர அணிந்து மணப்பெண் கோலத்தில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து ரசித்தார்.