முகத்திற்கும் பொலிவை தருகிறது கிரீன் டீ…

முகத்திற்கும் பொலிவை தருகிறது கிரீன் டீ…

கிரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியதாக இருக்கிறது.

முதலில் உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய வேண்டும். அதற்கு ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பையும் தராது.

வீட்டிலேயே இந்த ஸ்க்ரப்பை செய்து அதன் பயனை முழுவதும் பெறுங்கள்.

தேவையான பொருட்கள் :

கிரீன் டீ பேக் – 2
தேன் – 1 டீ ஸ்பூன்

கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும்.

பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள்.

இவ்வாறு தினமும் செய்தால் அழுக்குகள் இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்கும்…