வரவு செலவுத் திட்டம் வரும் வரையில் வாகனம் வாங்க வேண்டாம், வரவு செலவில் வாகன விலை மாறுவது இப்படித்தான்..

வரவு செலவுத் திட்டம் வரும் வரையில் வாகனம் வாங்க வேண்டாம், வரவு செலவில் வாகன விலை மாறுவது இப்படித்தான்..

வரவு செலவு திட்டத்தில் இம்முறை மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் மற்றும் 1,000 தொடக்கம் 1,500 க்கு இடையே இயந்திர வலு கொண்ட மோட்டார் வாகனங்களின் வரியை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இதன்படி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் 1,000 தொடக்கம் 1,500 க்கு இடையே இயந்திர வலு கொண்ட மோட்டார் வாகனங்களின் விலை மாறாமல் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய ரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலையை குறைப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கவனம் செலுத்தியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலை குறைத்து அவற்றின் கேள்வி அதிகமானால், எரிபொருளுக்கான செலவு இல்லாமல் போவதுடன், வெளிநாடுகளுக்கு செல்லும் பணம் குறைந்து வரும் நாடாக இலங்கை மாறுவதுடன், சூழலும் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz_mira)