அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று(29) முதல் குறைப்பு..

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று(29) முதல் குறைப்பு..

அரிசி, பெரியவெங்காயம், ரின் மீன், பால்மா, நெத்தலி உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று(29) முதல் குறைக்கப்பட்டுள்ளன.

நேற்று(28) நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வாழ்க்கைச் செலவின குழுக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலைகளை குறைக்குமாறு ஆலோசனை வழங்கியதாக கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1Kg நாட்டரசி 74 ரூபாவிற்கும் 1Kg சிவப்பு அரிசி 75 ரூபாவிற்கும் 1Kg சம்பா அரிசி 84 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. சிவப்பு சம்பா அரிசி 1Kg 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

கைக்குத்தல் அரிசிக்கு உயர்ந்த பட்ச கிராக்கி நிலவுகிறது. இந்த வகை அரிசி 1Kg 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 1Kg நெத்தலி 535 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, 1Kg பெரிய வெங்காயம் 125 ரூபாவாகும். 1Kg உள்நாட்டு உருளைக் கிழக்கு 130 ரூபாவாகும். 1Kg சீனியின் விலை 107 ரூபாவாகும். 1Kg பருப்பு 152 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

1Kg கோதுமை மா 86 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். இவற்றை சதொச கிளைகள் ஊடாக இன்று(29) முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்யலாம்.

இவற்றின் ஊடாக மீன், தேங்காய் போன்றவற்றையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நாடெங்கிலும் 370 சதொச கிளைகள் இயங்குகின்றன. விரைவில் 30 கிளைகள் புதிதாக திறக்கப்படும் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி ரி.எம்.கே.பி.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)