மீண்டும் புனரமைக்கப்படவுள்ள கடதாசி தொழிற்சாலைகள்…

மீண்டும் புனரமைக்கப்படவுள்ள கடதாசி தொழிற்சாலைகள்…

அரச, தனியார் துறை பங்களிப்பு திட்டத்தின் மூலம் வாழைச்சேனை எம்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி தொழிற்சாலைகள் இரண்டும் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளது.

தென்கொரியா, இலங்கைக்கு வழங்கும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் , ஜேர்மன் ஓயின் நிறுவனத்தில் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான இந்தியாவில் செயற்படும் எஸ்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் புதிய திட்டத்தை முன்னெடுப்பதற்கு வாழைச்சேனை தேசிய கடதாசி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி மங்கள சி. செனரத் செயல்படுகின்றார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரது இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பான அரச மற்றும் தனியார் கூட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன.